இன்று முதல் ராஞ்சியில் ஆசிய சாம்பியன்ஷிப் மகளிர் ஹாக்கி

ராஞ்சி: இந்தியா உட்பட 6 நாடுகள் பங்கேற்கும் மகளிர் ஆசிய சாம்பியஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் இன்று தொடங்குகிறது. ஆடவர்களுக்கான ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டி ஆகஸ்ட் மாதம் சென்னையில் சிறப்பாக நடந்தது. அந்தப்போட்டியில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றது. இந்நிலையில் மகளிருக்கான 7வது ஆசிய சாம்பியன்ஷிப் கோப்பை ஹாக்கிப் போட்டியும் இந்தியாவில் நடைபெற உள்ளது. ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நாளை முதல் நவ.5ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் இந்தியா, ஜப்பான், சீனா, கொரியா, மலேசியா, தாய்லாந்து என 6 மகளிர் அணிகள் களம் காண உள்ளன.

முதல் ஆட்டத்தில் இன்று மாலை ஜப்பான்-மலேசிய அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு நடைபெறும் 3வது ஆட்டத்தில் இந்தியா, தாய்லாந்து அணியை எதிர்கொள்ள உள்ளது. லீக் சுற்று ஆட்டங்கள் நவ.2ம் தேதியுடன் முடிகிறது. அதில் முதல் 4 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதியில் விளையாடும். அரையிறுதி ஆட்டங்கள் நவ.4ம் தேதி நடத்தப்படும். தொடர்ந்து இறுதி ஆட்டம் நவ.5ம் தேதி இரவு நடக்கும்.

 

The post இன்று முதல் ராஞ்சியில் ஆசிய சாம்பியன்ஷிப் மகளிர் ஹாக்கி appeared first on Dinakaran.

Related Stories: