இந்தியா ஏமாற்றம்: 2வது பயிற்சி ஆட்டமும் ரத்து

திருவனந்தபுரம்: இந்தியா – நெதர்லாந்து அணிகளிடையே நடக்க இருந்த ஐசிசி உலக கோப்பை பயிற்சி ஆட்டம் கனமழை காரணமாக கைவிடப்பட்டது. கிரீன்பீல்டு சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நேற்று நடக்க இருந்த இப்போட்டி, டாஸ் கூட போடப்படாத நிலையில் ரத்தானது இந்திய வீரர்களையும், ரசிகர்களையும் ஏமாற்றத்தில் ஆழ்த்தியது. ஏற்கனவே இங்கிலாந்து – இந்தியா அணிகளிடையே கவுகாத்தியில் செப். 30ல் நடப்பதாக இருந்த முதல் பயிற்சி ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து அணிக்கும் இதே நிலைதான்.

தொடர்ச்சியாக பல பயிற்சி ஆட்டங்கள் மழையால் பாதிக்கப்பட்ட நிலையில், கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் ஐசிசி உலக கோப்பை தொடர் அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் நாளை தொடங்குகிறது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் இங்கிலாந்துடன் நியூசிலாந்து அணி மோதுகிறது. ரோகித் தலைமையிலான இந்திய அணி தனது முதல் லீக் ஆட்டத்தில் அக்.8ம் தேதி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது. இந்த போட்டி, சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடக்க உள்ளது.

The post இந்தியா ஏமாற்றம்: 2வது பயிற்சி ஆட்டமும் ரத்து appeared first on Dinakaran.

Related Stories: