பாஜவுக்கும் எடப்பாடி விசுவாசமாக இல்லை:டிடிவி.தினகரன்

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நேற்று அளித்த பேட்டி: பாஜ கூட்டணியிலிருந்து அதிமுக பிரிந்துள்ளது. இப்போது டெல்லி சென்று ஏமாற்றத்துடன் திரும்பி உள்ளனர். அதுதான் கூட்டணி விரிசலுக்கு காரணமாக உள்ளதா? அல்லது அதையும் தாண்டி வேறு காரணம் உள்ளதா என தெரியவில்லை. ஜெயலலிதா தலைமையில் இருந்த கட்சி தான் உண்மையான அதிமுக. தற்போது உள்ளது கட்சி களவாடப்பட்ட அதிமுக,. சசிகலாவிடமிருந்து ஓபிஎஸ் பிரிந்து சென்றதால் எடப்பாடி முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்டார்.

சசிகலாவுக்கும் நன்றி இல்லாமல் இருந்தார். நான்காண்டு காலம் பாஜ தயவில் ஆட்சியை நடத்தி வந்தார். தற்போது அவர்களுக்கும் எடப்பாடி உண்மையாக இல்லை என்பது புரிந்திருக்கும். ஒன்றியத்தில் தேசிய கட்சிகள் ஆட்சி அமைந்தாலும் மாநிலத்தின் உரிமைகளுக்கு மாநில கட்சிகள் தான் போராட முடியும். அதேபோல் நாடாளுமன்றத் தேர்தலிலும் மாநில கட்சிகளுக்கு ஆதரவளிக்கும்போது தான் மக்கள் பிரச்னைகளை தட்டிக் கேட்க முடியும். இரட்டை இலை மட்டும் இல்லையென்றால் எடப்பாடி தலைமையிலான அதிமுக மூட்டையிலிருந்து கொட்டப்படும் நெல்லிக்காய் போல் சிதறும். இவ்வாறு கூறினார்.

The post பாஜவுக்கும் எடப்பாடி விசுவாசமாக இல்லை:டிடிவி.தினகரன் appeared first on Dinakaran.

Related Stories: