கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி: வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு தீவிர சிகிச்சை

கேரளா: நிபா வைரஸ் பரவிவரும் கேரள மாநிலம் கோழிக்கூட்டில் மேலும் ஒருவருக்கு நிபா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 39 வயது நபருக்கு தொற்று உறுதியானதை அடுத்து கேரளாவில் நிபா வைரசால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6 ஆக அதிகரித்திருக்கிறது. ஏற்கனவே இருவர் உயிரிழந்துவிட்ட நிலையில் தற்போது கோழிக்கோடு மருத்துவமனையில் கண்காணிப்பில் உள்ள 4 பேரில் செயற்கை சுவாச கருவியோடு சிகிச்சை பெற்றுவரும் 9 வயது சிறுவனின் உடல் நிலை கவலை கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

இதனிடையே புனேவில் உள்ள ICMR ன் நுண்ணுயிரி ஆய்வகம் பிஎஸ்எல் 3 என்ற நடமாடும் ஆய்வகத்தை கேரளாவுக்கு அனுப்பிவைத்துள்ளது. இதனால் கோழிக்கோட்டில் சேகரிக்கப்படும் ரத்த மாதிரிகளை உடனுக்குடன் சோதனைக்கு உட்படுத்தி சிலமணி நேரத்தில் தொற்றை கண்டறிய முடியும்.

கேரள சுகாதாரத்துறை அதிகாரிகள் விழிப்புடன் இருப்பதாக தெரிவித்துள்ள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் கோழிக்கோட்டின் ஆண்டை மாநிலங்களான கன்னூர், வயநாடு மற்றும் மலபுரத்தில் கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்த பட்டுள்ளதாக கூறினார். இதனிடையே நிபா நோய் தொற்று மேலாண்மையில் மாநில அரசுக்கு உதவுவதற்காக கேரளா வந்துள்ள 5 பேர் கொண்ட ஒன்றிய அரசின் நிபுணர் குழு கோழிக்கோட்டில் முகாமிட்டு ஆய்வுகளை மேற்கொண்டுள்ளது. நிபா வைரஸ் பரவல் நோய் தொற்றி பரவல் வழியாக திங்கட்கிழமை வரை கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளது.

The post கேரளாவில் மேலும் ஒருவருக்கு நிபா வைரஸ் பாதிப்பு உறுதி: வைரசால் பாதிக்கப்பட்டுள்ள 4 பேருக்கு தீவிர சிகிச்சை appeared first on Dinakaran.

Related Stories: