செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை

காஞ்சிபுரம்:  காஞ்சிபுரம் மாவட்டம், ஒலிமுகமதுபேட்டை,  நகராட்சி நடுநிலைப் பள்ளி மற்றும் கீழம்பி ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளிகளில் பள்ளிக்கு வந்த 1 முதல் 8ம் வகுப்பு மாணவர்களை மாவட்ட  கலெக்டர் ஆர்த்தி பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.காஞ்சிபுரம் வருவாய் மாவட்டத்திலுள்ள காஞ்சிபுரம் மற்றும்பெரும்புதூர் கல்வி மாவட்டங்களில் செயல்படும் அரசு / அரசு உதவிபெறும் தனியார் தொடக்க நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1 முதல் 8 ம் வகுப்பு வரை பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நேற்று பள்ளிகள் திறக்கப்பட்டது. இதில் 683 தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் மற்றும் 245 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 1,75,116 மாணவ, மாணவியர் தங்களது கல்வியை சுமார் 19 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் தொடங்குகின்றனர். அனைத்து பள்ளிகளிலும் அரசு வெளியிட்டுள்ள கொேரானா பாதுகாப்பு வழிகாட்டுதல்களை பின்பற்றி தேவைப்படும் இடங்களில் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த நடவடிக்கை மாணவர்களை மகிழ்விக்கும் விதமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், 15 நாள்களுக்கு மனமகிழ்ச்சி செயல்பாடுகளுக்கான வழிகாட்டுதல்கள், புத்தாக்க பயிற்சி புத்தகங்கள் வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு போதிக்கப்படவுள்ளது.எனவே, அனைத்து குழந்தைகளும் தொடர்ந்து கல்வி கற்பதற்காக அரசு எடுத்து வரும் அனைத்து முயற்சிகளுக்கும் நாம் அனைவரும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் கேட்டுக்கொண்டுள்ளார். இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் எம்எல்ஏ  எழிலரசன், ஒலிமுகமதுப்பேட்டை நகராட்சி நடுநிலைப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயந்தி, கீழம்பி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி தலைமையாசிரியர் க.ஜெயந்தி மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் அரசு, தனியார் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் என 1702 பள்ளிகள் உள்ளது. கொரோனா தொற்று குறைந்த நிலையில்,  இந்த பள்ளிகள் அனைத்தும் நேற்று திறக்கப்பட்டன. , மாணவ, மாணவியர்கள், மிகுந்த உற்சாகத்துடன் பள்ளிக்கு வருகை தந்தனர்.   பெரும்புதூர்:  பெரும்புதூர் ஒன்றியம் குண்ணம் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் நேற்று பள்ளிக்கு வந்தனர். அவர்களுக்கு பெரும்புதூர் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை, பெரும்புதூர் ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி, பெரும்புதூர் ஒன்றிய செயலாளர் மேவளூர்குப்பம் கோபால், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி போஸ்கோ, மாவட்ட கவுன்சிலர்கள் குண்ணம் ராமமூர்த்தி, சோகண்டி பாலா ஆகியோர் கலந்து கொண்டு பூங்கொத்து, இனிப்பு, திருக்குறள் புத்தகம் வழங்கி வரவேற்றனர். இதேபோல் எச்சூர், மொளச்சூர், சந்தவேலூர் பள்ளி மாணவர்களுக்கும் பூங்கொத்து கொடுத்து சிறப்பான வரவேற்பு அளித்தனர். திருப்போரூர்: திருப்போரூர் ஒன்றியத்திலடங்கிய 99 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளும் நேற்று திறக்கப்பட்டன. திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி,  ஒன்றியக்குழுத் தலைவர் இதயவர்மன் கேளம்பாக்கம், திருப்போரூர் தொடக்கப் பள்ளிகளுக்கு சென்று மாணவர்களை வரவேற்று பூங்கொத்து மற்றும் சாக்லேட் வழங்கினர். மேலும், பள்ளியில் சீருடை, நோட்டுப் புத்தகம், புத்தகப்பை பெறாத மாணவர்களுக்கு நேற்று அனைத்து பொருட்களையும் வழங்கி தேசியக் கொடியை ஏற்றி வைத்தனர்.         மாணவ, மாணவியர்களுக்கு எழுதுபொருட்கள் வழங்கி வரவேற்புசெங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்துர் ஊராட்சி ஒன்றியம், சிங்கபெருமாள் கோயில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில், நேற்று முதல் 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு மாணவ, மாணவியர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதையொட்டி, மாவட்ட ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல் நாத்  நேற்று, உற்சாகமாக வந்த மாணவ, மாணவியர்களுக்கு இனிப்புகள் மற்றும் எழுதுபொருட்களை வழங்கி வரவேற்றார். அப்போது, செங்கல்பட்டு சட்டமன்ற உறுப்பினர் வரலட்சுமிமதுசூதனன், காட்டாங்கொளத்துர் ஊராட்சி ஒன்றிய தலைவர் ஜெ.உதயா, துனைத்தலைவர் ஆராமுதன், திமுக நிர்வாகிகள் எம்.கே.டி கார்த்திக், கே.பி.ராஜன், மற்றும் பள்ளி ஆசிரியர்கள் உடனிருந்தனர்….

The post செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் பள்ளிகள் திறப்பு மாணவர்கள் உற்சாகத்துடன் வருகை appeared first on Dinakaran.

Related Stories: