இதன் பலனாக 39வது நிமிடத்தில் அமண்டா இலெஸ்டட், 44வது நிமிடத்தில் ஃபிரிடோலினா ரால்ஃபோ, 45+1வது நிமிடத்தில் ஸ்டினா பிளாக்ஸ்டெனிஸ் ஆகியோர் கோலடிக்க இடைவேளையின்போது ஸ்வீடன் 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை வகித்தது. 2வது பாதியிலும் ஆதிக்கத்தை தொடர்ந்த ஸ்வீடன் அணிக்கு 50வது நிமிடத்தில் அமண்டா இலெஸ்டட் மீண்டும் ஒரு கோல் அடித்து அசத்தினார். 90+5வது நிமிடத்தில் ரெபக்கா பிளோக்விஸ்ட் ஒரு கோல் அடிக்க, ஸ்வீடன் அணி 5-0 என்ற கோல் கணக்கில் அபாரமாக வென்று நாக் அவுட் வாய்ப்பை உறுதி செய்தது. எப் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் பிரான்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் பிரேசில் அணியை வீழ்த்தியது.
The post இத்தாலியை துவம்சம் செய்த ஸ்வீடன்: மகளிர் உலக கோப்பை கால்பந்து appeared first on Dinakaran.