ராயல்கேர் மருத்துவமனை டாக்டருக்கு விருது

 

கோவை, ஜூலை 26: கோவை ராயல்கேர் மருத்துவமனை தலைவரும், உயிரின் சுவாசம் அறக்கட்டளை அறங்காவலருமான டாக்டர் கே.மாதேஸ்வரனுக்கு வான் முகில் தொண்டர் விருது வழங்கப்பட்டது. கோவை மாநகர் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் உயிரின் சுவாசம் அறக்கட்டளை மூலம் 10 கோடி மரக்கன்றுகள் 100 மாதங்களில் நடவு செய்து பசுமை மாவட்டங்களாகவும், இயற்கை மிகு மண்டலமாகவும் மாற்றும் நோக்கில், இதுவரை 45 லட்சம் மரக்கன்றுகள் பொதுமக்களுக்கு இலவசமாகவும், பொது இடங்களில் நடவு செய்தும் அடர் வனங்கள் அமைத்ததற்காகவும் விருது வழங்கி வாழ்த்துரை வழங்கினார். இந்த விழாவில் 47 ராயல்கேர் மருத்துவர்களுக்கு கோவிட் காலத்தில் சிறப்பாக பணியாற்றியதற்கு ‘கோவிட் வாரியர்ஸ்’ விருதுகள் தனியார் வானொலி நிறுவனம் சார்பில் வழங்கப்பட்டது. இதில், நூற்றுக்கும் அதிகமான மருத்துவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

The post ராயல்கேர் மருத்துவமனை டாக்டருக்கு விருது appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.