அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி

மதுக்கரை, ஜூலை 23: கோவை – பொள்ளாச்சி நெடுஞ்சாலை ஈச்சனாரி அருகே கடந்த 15ம் தேதி சாலையை கடக்க முயன்ற முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு நிற்காமல் சென்றது. உயிருக்கு போராடிய அவரை அவ்வழியாக சென்றவர்கள் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கோவை அரசு மருத்துவமனையில் அதி தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட முதியவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த மதுக்கரை போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த முதியவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இறந்த நபர் குறித்த அடையாளம் தெரிந்தால் மதுக்கரை காவல் ஆய்வாளரை அணுகலாம் என போலீசார் ஆங்காங்கே அறிவிப்பு நோட்டீஸ்களை ஒட்டி வருகின்றனர்.

The post அடையாளம் தெரியாத வாகனம் மோதி முதியவர் பலி appeared first on Dinakaran.

Related Stories:

சூலூரில் கலைஞரின் வரும் முன் காப்போம் மருத்துவ முகாம் வால்பாறை, ஜூன் 23: கோடை சீசன் முடிந்தும் வால்பாறைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து அதிகளவில் காணப்பட்டது. தேயிலை தோட்டங்களில் நின்று ஆர்வமுடன் போட்டோ எடுத்து மகிழ்ந்தனர். வால்பாறையில் நேற்று சுற்றுலா பயணிகள் வரத்து அதிகரித்து காணப்பட்டது. வால்பாறை பகுதியில் நிலவும் குளு குளு காலநிலை சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. மேலும், மழை, வெயில், மூடு பனி என ஒவ்வொரு பகுதியிலும் விதவிதமான கால நிலை நிலவுவதால் சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர். இந்நிலையில், வாட்டர் பால்ஸ் பகுதியில் சாரல் மழை மற்றும் வெயில் நீடிக்கிறது. கவர்கல் பகுதியில் மூடுபனி நிலவியது. வால்பாறை பகுதியில் லேசான சாரல் மழை மற்றும் மேக மூட்டம் நீடித்தது. 3 வகை கால நிலை ஒரு பகுதியில் நிலவுவதால் சுற்றுலா பயணிகள் குதூகலம் அடைந்தனர். மேலும், யானைகள், வரையாடுகள், காட்டு பன்றிகள், மான்கள் என சாலையோரம் வலம் வரும் வன விலங்குகள், புதிய நீர்வீழ்ச்சிகள் சுற்றுலா பயணிகளை உற்சாகப்படுத்தியது. வால்பாறை பூங்கா, படகு இல்லம், கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகளவில் காணப்பட்டது. வால்பாறையின் முக்கிய சுற்றுலா தலமான நல்லமுடி பூஞ்சோலை பகுதியில் குவிந்த சுற்றுலா பயணிகளால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால், சாலையின் இருபக்கமும் வாகனங்கள் வரிசையாக நின்றது. காவல்துறை மற்றும் வனத்துறையினர் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்தனர். வால்பாறையில் சுற்றுலா பனிகள் கூட்டம் அதிகரித்துள்ளதால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.