முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்டம்

 

முத்துப்பேட்டை, ஜூலை 13: முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய குழு கூட்டம் ஒன்றிய குழு உறுப்பினர் பரிமளா தலைமையில் நடைப்பெற்றது, ஒன்றிய செயலாளர் உமேஷ்பாபு முன்னிலை வகித்து பேசினார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநில நிர்வாக குழு உறுப்பினர் மாரிமுத்து எம்எல்ஏ கலந்து கொண்டு பேசினார். வரும் 18, 19ம் தேதிகளில் நடைபெறும் தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கத்தின் திருவாரூர் மாவட்ட மாநாடு, திருத்துறைப்பூண்டியில் நடைபெறும் துவக்க நிகழ்ச்சியில் 200 பேர் கலந்து கொள்வது,

ஜூலை 28, 29, 30 ஆகிய தேதிகளில் ராஜபாளையத்தில் நடைபெறும் மாநில மாநாட்டில் முத்துப்பேட்டை ஒன்றியத்தில் இருந்து 30 வேன் மூலம் கலந்து கொள்வது என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து உறுப்பினர்களுக்கு இந்தாண்டிற்கான கட்சி உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. இக்கூட்டத்தில் மாநில குழு உறுப்பினர் சந்திரசேகர ஆசாத், மாவட்ட நிர்வாக குழு உறுப்பினர் முருகையன், வி.தொ.ச ஒன்றிய செயலாளர் சிவசந்திரன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

The post முத்துப்பேட்டையில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய குழு கூட்டம் appeared first on Dinakaran.

Related Stories: