தனியாரிடம் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஒப்படைக்க முடிவு

புதுடெல்லி: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) பிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 1,750 கிலோ எடையும், ஜிஎஸ்எல்வி ராக்கெட் மூலம் 4,000 கிலோ எடையும் கொண்ட செயற்கை கோள்களை விண்ணில் செலுத்தி வருகிறது. இதுதவிர, 500 கிலோ வரை எடை குறைந்த செயற்கைகோள்களை அனுப்ப எஸ்எஸ்எல்வி ராக்கெட் உருவாக்கப்பட்டது. இதன் முதன் முயற்சி தோல்வி அடைந்தாலும், கடந்த பிப்ரவரியில் விண்ணில் வெற்றிகரமாக ஏவப்பட்டு, 3 செயற்கைகோள்களை புவியின் தாழ்வட்ட சுற்றுப்பாதையில் நிலை நிறுத்தியது.

இந்நிலையில், எஸ்எஸ்எல்வி ராக்கெட்டை முழுமையாக தனியார் வசம் ஒப்படைக்க இஸ்ரோ முடிவு செய்துள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். இதன் உற்பத்தி மட்டுமல்லாமல், ஏவுதல் உள்ளிட்ட முழுமையான பணிகளும் தனியார் மயமாக்கப்படும் என அவர் கூறி உள்ளார்.

The post தனியாரிடம் எஸ்எஸ்எல்வி ராக்கெட் ஒப்படைக்க முடிவு appeared first on Dinakaran.

Related Stories: