ஸ்ரீபெரும்புதூரில் கோட்டாட்சியர் அலுவலகம் திறப்பு

ஸ்ரீபெரும்புதூர்: ஸ்ரீபெரும்புதுார் தாலுகாவை கடந்த 2019ம் ஆண்டு இரண்டாக பிரிக்கபட்டு, குன்றத்தூர் தாலுகா துவங்கபட்டது. இதையடுத்து ஸ்ரீபெரும்புதூர் மற்றும் குன்றத்தூர் தாலுகாவை இணைத்து கடந்த 2019ம் ஆண்டு ஸ்ரீபெரும்புதூர் வருவாய் கோட்டம் புதிதாய் உருவாக்கப்பட்டது. இதையடுத்து, ஸ்ரீபெரும்புதூர் வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் உள்ள மகளிர் பயிற்சி மையத்தில் தற்காலிகமாக கோட்டாட்சியர் அலுவலகம் இயங்கி வந்தது. இதனையடுத்துஸ்ரீபெரும்புதூர் வி.ஆர்.பி.சத்திரம் பகுதியில் உள்ள பொதுப்பணித்துறை ஆய்வு மாளிகை வளாகத்தில் ரூ.2.12 கோடி மதிப்பில் கோட்டாட்சியர் அலுவலகம், ரூ.36 லட்சம் மதிப்பில் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு, அதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், ஸ்ரீபெரும்புதுார் கோட்டாட்சியர் சரவணகண்ணன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் கலந்துகொண்டு, புதியதாக கட்டப்பட்ட ரூ.2.12 கோடி மதிப்பில் கோட்டாட்சியர் அலுவலகம், ரூ.36 லட்சம் மதிப்பில் கோட்டாட்சியர் குடியிருப்பு கட்டிடம் ஆகியவற்றை திறந்து வைத்தார். இதில் ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை, ஒன்றிய குழு தலைவர் கருணாநிதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post ஸ்ரீபெரும்புதூரில் கோட்டாட்சியர் அலுவலகம் திறப்பு appeared first on Dinakaran.

Related Stories: