ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் :அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு!!

வாஷிங்டன்: ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் என்று அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி அறிவித்தார். அமெரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட பிரதமர் மோடி அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.இந்த நிலையில், அமெரிக்காவின் தலைநகர் வாஷிங்டனில் இந்திய வம்சாவளியினர் முன்னிலையில் பிரதமர் மோடி பேசினார்.அப்போது அவர் பேசியதாவது, “அமெரிக்காவின் ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைக்கப்படும், மத்திய அரசின் நிதியுதவியுடன் தமிழ் இருக்கை அமைக்கப்படும். இந்தியாவின் 100க்கும் மேற்பட்ட பழங்கால பொருட்களைத் திரும்ப ஒப்படைக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளது. பழங்கால பொருட்களைத் திரும்ப ஒப்படைக்கும் அமெரிக்காவின் முடிவு மகிழ்ச்சி அளிக்கிறது.

பெங்களூரு, அகமதாபாத்தில் அமெரிக்க தூதரகங்கள் திறக்கப்படும். எச் 1பி விசாவை இனி அமெரிக்காவிலேயே புதுப்பித்துக் கொள்ளலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்காவில் பணிபுரியும் இந்தியர்களின் வசதிக்காக எச் 1 பி விசாவை அங்கேயே புதுப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.இந்தியா – அமெரிக்கா இடையிலான நட்புறவை ஜோ பிடன் அடுத்தக்கட்டத்திற்கு எடுத்துச் செல்ல முயல்கிறார். அமெரிக்காவில் இருந்து முதலீடுகள் வேலை வாய்ப்பு உருவாக்கத்தை மேலும் மேம்படுத்தும். இந்தியாவில் முடிந்த அளவு முதலீடுகளை செய்ய இதுதான் சிறந்த தருணம் ஆகும்,’என்றார். இதனிடையே பிரதமர் மோடிக்கு சிறப்பு டி -சர்ட்டை அமெரிக்க அதிபர் ஜோபிடன் பரிசளித்தார். செயற்கை நுண்ணறிவு குறித்த மோடியின் மேற்கோள் அச்சிடப்பட்ட டி -சர்ட்டை பிடன் பரிசாக வழங்கினார். அமெரிக்கா மற்றும் இந்தியாவில் செயற்கை நுண்ணறிவின் முக்கியமான வளர்ச்சியை மோடி பாராட்டி இருந்தார்.

The post ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை நிறுவப்படும் :அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் பிரதமர் மோடி பேச்சு!! appeared first on Dinakaran.

Related Stories: