வில்லியம்சனை தொடர்ந்து உலக கோப்பையில் இருந்து மைக்கேல் பிரேஸ்வெல் விலகல்: நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு

வெலிங்டன்: நியூசிலாந்து கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டர் மைக்கேல் பிரேஸ்வெல் . 32 வயதான இவர் நியூசிலாந்து அணிக்காக 8 டெஸ்ட், 19 ஒன்டே மற்றும் 16 டி.20 போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல்லில் இவர் பெங்களூரு அணிக்காக விளையாடினர். இந்நிலையில் இங்கிலீஷ் டி20ல் ப்ளாஸ்டில் வொர்செஸ்டர்ஷைர் ரேபிட்ஸ் அணிக்காக பேட்டிங் செய்யும் போது அவர் காயம் அடைந்தார். வலது கையில் தசைநார் கிழிந்துள்ளது.

இதற்காக அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது. சிகிச்சை முடிந்து அவர் நியூசிலாந்து திரும்ப 2 வாரங்கள் ஆகும். காயத்தில் இருந்து முழுமையாக குணமாக 4,5 மாதங்கள் ஆகும்.இதனால் அவர் இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் நடைபெற உள்ள உலக கோப்பை தொடரில் இருந்து விலகி உள்ளார். ஏற்கனவே கேப்டன் வில்லியம்சன், ஐபிஎல்லில் குஜராத் அணிக்காக சிஎஸ்கேவுக்கு எதிரான போட்டியில் காலில் காயம் அடைந்தார்.

இதனால் அறுவை சிகிச்சை செய்துகொண்டு ஓய்வில் இருக்கும் அவர் உலக கோப்பையில் இருந்துவிலகி உள்ளார். இந்நிலையில் பிரேஸ்வெல்லும் விலகி இருப்பது நியூசிலாந்து அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது.
மைக்கேல் ஒரு சிறந்த அணி வீரர். அவரது சர்வதேச அறிமுகத்திலிருந்து நியூசிலாந்திற்கு 15 மாதங்கள் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். பீல்டிங், பேட்டிங், பவுலிங் என 3 வகையில் சிறப்பாக செயல்படுவார். மேலும் அவர் உலகக் கோப்பையில் எங்களுக்கு ஒரு முக்கிய வீரராக உருவெடுத்தார். இவரது விலகல் ஏமாற்றம் அளிக்கிறது, என நியூசிலாந்து தலைமை பயிற்சியாளர் கேரி ஸ்டெட் தெரிவித்துள்ளார்.

The post வில்லியம்சனை தொடர்ந்து உலக கோப்பையில் இருந்து மைக்கேல் பிரேஸ்வெல் விலகல்: நியூசிலாந்து அணிக்கு பின்னடைவு appeared first on Dinakaran.

Related Stories: