ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு திருமணம்: டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் இருந்து விலகல்

மும்பை: மகாராஷ்டிராவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வீரர் ருதுராஜ் கெய்க்வாட். 27 வயதான இவர் ஐபிஎல்லில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்திய அணிக்காக இதுவரை ஒரு ஒருநாள் போட்டி 8 டி.20 போட்டிகளில் ஆடி உள்ளார். இவர் உத்கர்ஷா என்பவரை காதலித்து வந்தார்.

இந்நிலையில் இவர்களின் திருமணம் ஜூன் 4 மற்றும் 5ம் தேதிகளில் நடைபெற உள்ளது. லண்டன் ஓவலில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இந்திய விளையாட உள்ள டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனல் போட்டிக்காக கூடுதல் வீரராக கெய்க்வாட் சேர்க்கப்பட்டிருந்த நிலையில் திருமணத்திற்காக அவர் விலகி உள்ளார்.

இதையடுத்து அவருக்கு பதிலாக ஜெய்ஸ்வால் சேர்க்கப்பட்டுள்ளார். ஐபிஎல்லில் ராஜஸ்தானுக்காக ஆடி வரும் ஜெய்ஸ்வால் நடப்பு சீசனில் ஒரு சதம் உள்பட 635 ரன் குவித்தார். இவரின் ஆட்டத்தை பார்த்த ராகுல்டிராவிட் அணிக்கு அழைத்துள்ளார். ஓரிரு நாளில் ஜெய்ஸ்வால் லண்டன் புறப்படுவார் என தெரிகிறது.

இதனிடையே டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனலுக்காக கேப்டன் ரோகித்சர்மா, இஷான்கிஷன் இன்று அதிகாலையில் லண்டன் புறப்பட்டுச் சென்றனர். சூர்யகுமார்யாதவ், ஜடேஜா, சுப்மன்கில், முகமதுஷமி இன்று ஐபிஎல் முடிந்து நாளை மறுநாள் லண்டன் புறப்படுவார்கள் என தெரிகிறது.

The post ருதுராஜ் கெய்க்வாட்டிற்கு திருமணம்: டெஸ்ட் சாம்பியன் ஷிப் தொடரில் இருந்து விலகல் appeared first on Dinakaran.

Related Stories: