2 டெஸ்ட், 3 ஒன்டே, 5 டி.20 போட்டியில் ஆட வெஸ்ட்இண்டீசுக்கு ஜூலையில் இந்தியா பயணம்: போட்டி அட்டவணை அடுத்த வாரம் வெளியீடு

மும்பை: ஐபிஎல் இறுதி போட்டிமுடிந்த கையோடு இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்து புறப்படுகிறது. அங்கு ஓவல் மைதானத்தில் டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் ஜூன் 7ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்காக கோஹ்லி, முகமது சிராஜ், உமேஷ் யாதவ், அஸ்வின், ஷர்துல்தாகூர் உள்ளிட்ட வீரர்கள் இங்கிலாந்து சென்றுவிட்ட நிலையில் ரோகித்சர்மா, ஷமி, உள்ளிட்ட வீரர்கள் ஐபிஎல் பைனல் முடிந்ததும் புறப்படுகின்றனர். டெஸ்ட் சாம்பியன் ஷிப் பைனல் முடிந்ததும் இந்தியா சொந்த மண்ணில் இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தானுடன் ஒரு நாள் போட்டிகளில் மோத உள்ளது.

இதனிடையே ஆப்கானிஸ்தானுக்கு எதிரான தொடர் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜூலை முதல் வாரத்தில் வெஸ்ட்இண்டீஸ் செல்லும் இந்திய அணி அங்கு 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும் 5 டி.20 போட்டிகளில் மோத உள்ளன. இந்த தொடர் ஜூலை 12ம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. பின்னர் செப்டம்பரில் ஆசிய கோப்பை தொடர் நடைபெற உள்ளது. இந்த போட்டி அட்டவணை விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

The post 2 டெஸ்ட், 3 ஒன்டே, 5 டி.20 போட்டியில் ஆட வெஸ்ட்இண்டீசுக்கு ஜூலையில் இந்தியா பயணம்: போட்டி அட்டவணை அடுத்த வாரம் வெளியீடு appeared first on Dinakaran.

Related Stories: