விவேகானந்தா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம்

 

திருச்செங்கோடு, மே 8: அகமதாபாத் இந்திய தொழில் முனைவோர் மேம்பாடு, புத்தாக்க நிறுவனம் சார்பில் ஹேக்கத்தான் போட்டி நடந்தது. இதில் கலந்துகொண்ட 170 அணிகளில், 24 சிறந்த அணிகள் தேர்வு செய்யப்பட்டன. இதில் விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியில், உயிரியல் மருத்துவத் துறையில் இருந்து 2 அணிகளும் மின்னியல் மற்றும் மின்னணுவியல் துறையில் இருந்து ஒரு அணியும் தேர்வு செய்யப்பட்டு, தங்கள் படைப்புகள் பற்றி முதலீட்டாளர்கள் மற்றும் நிபுணர்கள் முன்னிலையில் விளக்கம் அளித்தனர்.

இறுதி போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளை, விவேகானந்தா கல்வி நிறுவனங்களின் தலைவர், செயலாளர் கருணாநிதி பாராட்டினார். மேலாண்மை இயக்குனர் கிருஷ்ணவேணி கருணாநிதி, இணை மேலாண்மை இயக்குனர் டாக்டர் அர்த்தநாரீஸ்வரன், இணைச்செயலாளர் டாக்டர் ஸ்ரீராகநிதி அர்த்தநாரீஸ்வரன், துணைத் தலைவர் டாக்டர் கிருபாநிதி, இயக்குனர் டாக்டர் நிவேதா கிருபாநிதி, செயல் இயக்குனர் குப்புசாமி, முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், முதல்வர் விஜயகுமார் மற்றும் துணைத் தலைவர்கள் வாழ்த்தினர்.

The post விவேகானந்தா கல்லூரி மாணவிகள் சிறப்பிடம் appeared first on Dinakaran.

Related Stories: