சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தி: ‘திராவிட வீரனே விழி, எழு, நட!’ எனத் திராவிட இனத்தைத் தட்டியெழுப்பிய நீதிக்கட்சியின் தந்தை தியாகராயரின் பிறந்தநாள். மாணவர்க்கு மதிய உணவு வழங்கி, இன்று காலைச் சிற்றுண்டி வழங்கும் நமது திராவிட மாடலுக்கு முன்னத்தி ஏராகத் திகழ்ந்தவர் அவர். அவர் காட்டிய பாதையில் தொடர்ந்து கொள்கை நடைபோடுவோம். தமிழ்நாட்டின் நலன் காக்க உழைப்போம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

The post சர்.பிட்டி. தியாகராயர் பிறந்த நாள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து appeared first on Dinakaran.

Related Stories: