திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே 1ம் தேதி முதல்சாமவேத பாராயணம்

திருமலை: ஆந்திர மாநிலம் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடைபெற்று வரும் சதுர்வேத பாராயண யாகத்தின் ஒரு பகுதியாக சாமவேத பாராயணம் மே 1ம் தேதி முதல் தொடங்க உள்ளது. ஜூன் 30ம் தேதி வரை இந்த பாராயணம் நிகழ்ச்சி நடைபெறும். இதில் ஒவ்வொரு குழுவிலும் 13 பேர் கொண்ட பண்டிதர்கள் 6 குழுக்களாகப் பாராயணம் செய்ய உள்ளனர். இந்த பாராயணத்தில் தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை கோயிலில் உள்ள ரங்கநாதர் மண்டபத்தில் நடைபெற உள்ளது. கொரோனா தொற்று நோயிலிருந்து மனிதகுலத்தை காப்பாற்ற வேண்டி ஏப்ரல் 2020 முதல் கோயிலில் பாராயணம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் கடந்த ஆண்டு செப்டம்பர் 4ம் தேதி முதல் கடந்த ஜனவரி 31ம் தேதி வரை கிருஷ்ண யஜுர்வேத பாராயணம் மேற்கொள்ளப்பட்டது. பிப்ரவரி 1 முதல் ஏப்ரல் 31 வரை ரிக்வேத பாராயணம் நடைபெற்றது.

 

The post திருப்பதி ஏழுமலையான் கோயிலில் மே 1ம் தேதி முதல்சாமவேத பாராயணம் appeared first on Dinakaran.

Related Stories: