டி.என்.பி.எஸ்.சி குருப் II / IIA தேர்விற்கு மென்பாடக்குறிப்புகள் பதிவிறக்குவதற்கான இணையதளம் இலவசமாக வெளியீடு..!!

சென்னை: டி.என்.பி.எஸ்.சி குருப் II / IIA தேர்விற்கு மென்பாடக்குறிப்புகள் பதிவிறக்குவதற்கான இணையதளம் இலவசமாக வெளியிடப்பட்டுள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையால் 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNSURB, மற்றும் TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டி தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20000-ற்கும் மேற்பட்ட மாணவ / மாணவிகள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர். மேலும், இப்பயிற்சி வகுப்புகளின் மூலம், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ/மாணவிகள் பல்வேறு போட்டித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று பல்வேறு அரசு பணிகளைப் பெற்றுள்ளனர்.

தற்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படவுள்ள தொகுதி II/IIA (TNPSC GROUP /IIA) தேர்விற்கு 2,327காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பு 20.06.2024 அன்று வெளியிடப்பட்டுள்ளது.இத்தேர்விற்கு விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள் 19.07.2024 ஆகும். தொகுதி /IIA-ற்கான முதல்நிலைத் தேர்விற்கு (TNPSC GROUP II / IIA Prelims) இலவச பயிற்சி வகுப்புகள் அனைத்து மாவட்டங்களில் உள்ள, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய அலுவலகங்களில் சிறந்த பயிற்றுநர்களைக் கொண்டு நடத்தப்படுகிறது.

14.09.2024 அன்று நடைபெறவுள்ள இத்தேர்விற்கு அதிகளவிலான பயிற்சி தேர்வுகளும் மற்றும் மாநில அளவிலான மாதிரி தேர்வுகளும்நடத்தப்படும். இத்தேர்விற்கான மென்பாடக்குறிப்புகள் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் https://tamilnaducareerservices.tn.gov.in/ என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இவ்விணையதளத்தில் பதிவு மென்பாடக்குறிப்புகளை இலவசமாக பதிவிறக்கம் செய்து, செய்து பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும், இத்தேர்விற்கான காணொலி பாடக்குறிப்புகள்

“TN Career Services Employment” என்ற You Tube பக்கத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. அரசுப்பணிக்கு கொண்ட செல்ல வேண்டும் போட்டித்தேர்விற்கு தயாராகும் என்ற மாணவ/மாணவிகள் இலக்கை இப்பயிற்சி வகுப்புகளில் கலந்து கொள்ள அந்தந்த மாவட்டத்திலுள்ள மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரில் அணுகுமாறு வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் எ.சுந்தரவல்லி, இ.ஆ.ப., தெரிவித்தார்கள்.

 

The post டி.என்.பி.எஸ்.சி குருப் II / IIA தேர்விற்கு மென்பாடக்குறிப்புகள் பதிவிறக்குவதற்கான இணையதளம் இலவசமாக வெளியீடு..!! appeared first on Dinakaran.

Related Stories: