திருப்போரூர் முருகன் கோயிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுப்பு

திருப்போரூர்: அதிமுக பொதுச்செயலாளராக பொறுப்பேற்ற எடப்பாடி பழனிச்சாமிக்கு பாராட்டு தெரிவித்து திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுத்தனர். முன்னாள் எம்எல்ஏ தண்டரை மனோகரன் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் பொன்னையன் கலந்துக் கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘எடப்பாடி பழனிசாமி சாதி, மத பேதமற்றவர். அவருடைய உழைப்பின் காரணமாக பொதுச்செயலாளர் நிலைக்கு உயர்ந்துள்ளார்.

தற்போது தொண்டர்கள் எல்லோரும் எடப்பாடி பழனிசாமி பின்னால் உள்ளனர். அனைத்து நிர்வாகிகளும் உள்ளனர். எடப்பாடி பழனிசாமி சட்டரீதியாக பொதுச்செயலாளர் ஆகியுள்ளார். இதில், ஓபிஎஸ் மீண்டும் அதிமுகவில் சேர்க்கப்படுவாரா என்ற கேள்வியே எழவில்லை’ என்றார். இந்நிகழ்ச்சியில், முன்னாள் அமைச்சர் சின்னையா, ஒன்றிய அதிமுக செயலாளர்கள் குமரவேல், நந்தகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post திருப்போரூர் முருகன் கோயிலில் அதிமுகவினர் தங்கத்தேர் இழுப்பு appeared first on Dinakaran.

Related Stories: