மின்னல் வேகத்தில் ராகுல் தகுதிநீக்கம்; அரசு இரட்டை வேடம் போடுகிறது: காங். தலைவர் கார்கே விமர்சனம்

புதுடெல்லி: ராகுல் காந்தி தகுதி நீக்க விவகாரத்தில் ஒன்றிய அரசு இரட்டை வேடம் போடுவதாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே விமர்சித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தனது டிவிட்டர் பதிவில், ‘‘ உண்மையை பேசிய ஒரு நபர் நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளார். குஜராத்தை சேர்ந்த பாஜ எம்பி நரன்பாய் பிகாபாய்க்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் 16 நாட்கள் வரை அவர் தகுதி நீக்கம் செய்யப்படவில்லை. ஆனால் ராகுல்காந்தி மட்டும் மின்னல் வேகத்தில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இது மோடி அரசின் பாசாங்கு தனம் மற்றும் இரட்டை வேடத்தின் உச்சமாகும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மின்னல் வேகத்தில் ராகுல் தகுதிநீக்கம்; அரசு இரட்டை வேடம் போடுகிறது: காங். தலைவர் கார்கே விமர்சனம் appeared first on Dinakaran.

Related Stories: