காட்பாடியில் 3 நாட்கள் நடக்கிறது மாநில அளவிலான சிலம்பம் பயிற்சி முகாம் உடற்கல்வி இயக்குனர்கள், ஆசியர்கள் பங்கேற்பு

வேலூர், செப்.29: காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசியர்களுக்கான 3 நாள் சிலம்பம் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. வேலூர் மாவட்டம், காட்பாடியில் உள்ள தனியார் பள்ளியில் மாநில அளவிலான உடற்கல்வி இயக்குனர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான 3 நாள் சிலம்பம் பயிற்சி முகாம் நேற்று தொடங்கியது. முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி தலைமை தாங்கினார். பள்ளி குழு தலைவர் சரவணன் முன்னிலை வகித்தார். மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் சரஸ்வதி வரவேற்றார்.

இந்த முகாமில் முதன்மை கல்வி அலுவலர் முனுசாமி பேசியதாவது: மாணவர்களுக்கு கல்விக்கு அளிக்கும் முக்கியத்துவத்தை போன்றே உடற்கல்விக்கும் தரவேண்டும். அனைத்து விளையாட்டு போட்டிகள் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ள வேண்டும். மாணவர்களுக்கு எந்த போட்டிகளில் ஆர்வம் உள்ளது என்பதை கண்டறிந்து அதனை ஊக்குவிக்கும் பொறுப்பு உடற்கல்வி ஆசிரியர்களுக்கு உண்டு என்பதை நினைவில் கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களின் திறமைகளை வெளிக்கொண்டுவர வேண்டும். வேலூர் மாவட்டத்திற்கு சிலம்பம் பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு 30ம் தேதி(நாளை) வரை 3 நாட்கள் நடைபெற உள்ளது. இதில் பல்ேவறு மாவட்டங்களை சேர்ந்த உடற்கல்வி ஆசிரியர்கள் உள்ளிட்ட 90 பேர் கலந்துகொண்டனர். பயிற்சி சிறப்பான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். நிகழ்ச்சியில் பள்ளியின் முதல்வர் திங்கள் ஜான்சன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் தினகரன், குமரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Related Stories: