பவானி அரசு மேல்நிலைப்பள்ளியில் சாலை விபத்து விழிப்புணர்வு கட்டுரைப் போட்டி

பவானி, செப்.3: பவானி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் மாணவியர் பங்கேற்ற சாலை விபத்துகளை தவிர்த்தல், விபத்தில்லா பயணம் குறித்த விழிப்புணர்வு கட்டுரைப் போட்டிகள் நடைபெற்றது. தமிழ்நாடு அனைத்து சாலைகளை பயன்படுத்துவோருக்கு விபத்தை தவிர்ப்போம் விழிப்புணர்வு இயக்கம் சார்பில் நடைபெற்ற இப்போட்டிகளில் சிறந்த கட்டுரைகளை எழுதி சமர்பித்த மாணவியருக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சிக்கு, பவானி கூடல் ரோட்டரி சங்கத் தலைவர் அண்ணாதுரை தலைமை தாங்கினார். பள்ளித் தலைமை ஆசிரியை கலைச்செல்வி வரவேற்றார். பவானி நகராட்சித் தலைவர் சிந்தூரி இளங்கோவன், துணைத் தலைவர் மணி ஆகியோர் பரிசுகளை வழங்கினார். ரோட்டரி சங்க ஆளுநர் தவமணி, விழிப்புணர்வு இயக்க ஒருங்கிணைப்பாளர் பூபதி ராஜா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். சாலையில் விபத்து இல்லாமல் எவ்வாறு பயன்படுத்துவது, பயணம் செய்வது எனும் தலைப்பில் இப்போட்டிகள் நடத்தப்பட்டன.

Related Stories: