பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம்

திருப்பூர், ஜூன் 25: 15 வேலம்பாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி மேலாண்மைக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழுத் தலைவர் சித்ரா, கல்வியாளர் சுவாமிநாதன், திருப்பூர் மாநகராட்சி மண்டலத் தலைவர் உமா மகேஸ்வரி, வட்டாரக் கல்வி அலுவலர் சின்னக்கண்ணு, தலைமை ஆசிரியர் ராதாமணி, ஆசிரியர் ஜனார்த்தனன் மற்றும் பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதேபோல், இப்பள்ளியில் அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளி ஆங்கிலம் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு ஆங்கில பயிற்சி, ஆசிரியர் பயிற்றுநர் கார்த்திகேயன் மூலமும், 4ம் வகுப்பு மற்றும் 5ம் வகுப்பு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு 2 நாள் ஆங்கில பயிற்சி பத்மாவதிபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில், ஆசிரியர் பயிற்றுநர் அமுதா மூலமும் வழங்கப்பட்டது. மேலும், அரசு 15 வேலம்பாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், 15 வேலம்பாளையம் நகராட்சி பள்ளியில் 6முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் 600 மாணவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.

Related Stories: