தீ விபத்தில் உடல் கருகி பெண் பலி

ஈரோடு, ஜூன் 25:  சித்தோடு அடுத்துள்ள ஆர்.என்.புதூர் பெருமாள்மலை, ராஜீவ் நகரை சேர்ந்தவர் மூர்த்தி. அவரது மனைவி நாகராணி(45). மூர்த்தி டைல்ஸ் பதிக்கும் வேலை செய்து வந்தார். நாகராணிக்கு இதய பாதிப்பு இருந்ததால் சிகிச்சை எடுத்து வந்தார். இந்நிலையில் கடந்த 18ம் தேதி நாகராணி டீ வைப்பதற்காக கேஸ் அடுப்பை பற்ற வைத்த போது எதிர்பாராதமாக அவர் அணிந்திருந்த நைட்டியில் தீ பிடித்தது. பலத்த தீக்காயங்களுடன் மீட்கப்பட்ட நாகராணி ஈரோடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நாகராணி சிகிச்சை பலனின்றி நேற்றுமுன்தினம் இறந்தார். இதுகுறித்து சித்தோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: