விபத்துகள் குறித்து விழிப்புணர்வு குறும்படம்

செங்கல்பட்டு: செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், விபத்துகள் குறித்து விழிப்புணர்வு குறும்படம் வெளியிடப்பட்டது. செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில், வாகனங்களால் ஏற்படும் விபத்துகள் குறித்து கணொளி  பிரசார வாகனத்தின்  மூலம் குறும்படம் செங்கல்பட்டு புதிய பஸ் நிலையம் அருகே  திரையிடப்பட்டது. இதில், வாகன விபத்து, ஹெல்மெட் அணிவதன் முக்கியத்துவம், சரக்கு வாகனத்தில் அதிகமாக பொதுமக்களை ஏற்றி சென்று விபத்து ஏற்படுத்துதல்,  உரிய லைசன்ஸ் இல்லாமல் மாணவர்கள் வாகனங்களை இயக்குவது, அதனால் ஏற்படும் உயிர் சேதங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

பின்பு, சாலை பாதுகாப்பு விதிகளை எப்படி பின்பற்ற வேண்டும் என்பது குறித்து, செங்கல்பட்டு  வட்டார போக்குவரத்து அலுவலர்  திருவள்ளுவன்  தலைமையில், மோட்டார் வாகன ஆய்வாளர் ஹமீதாபானு, மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு விளக்கி கூறினார்.

Related Stories: