மழை வேண்டி பெருவேள்வி உடல்பருமன் அறுவை சிகிச்சை சங்க தலைவராக ஜெம் மருத்துவமனை மருத்துவர் தேர்வு

கோவை, ஏப்.22: உடல்பருமன் அறுவைசிகிச்சை சொசைட்டி ஆப் இந்தியாவின் தலைவராக கோவை ஜெம் மருத்துவமனையின் பேரியாட்டிரிக்(உடல் பருமன்) அறுவை சிகிச்சைத் துறை தலைவர் டாக்டர். பிரவீன் ராஜ்  தேர்ந்தெடுக்கப்பட்டார். தென்னிந்தியாவில் இருந்து இந்த பதவிக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார்.  டாக்டர். பிரவீன் ராஜ் தலைவராவதற்கு முன்பு இரண்டு முறை நிர்வாக குழு உறுப்பினராகவும், சங்கத்தின் செயலாளராகவும் பணியாற்றியுள்ளார். அவர் 2022ம் ஆண்டு முதல் 2024 வரை இரண்டு ஆண்டுகள் இந்த பதவியில் தொடருவார். பெங்களூரில் நடைபெற்ற சங்கத்தின் ஆண்டு விழா மாநாட்டின் போது டாக்டர். பிரவீன் ராஜ்  இந்த பதவியை ஏற்றுக் கொண்டார்.

டாக்டர். பிரவீன்ராஜ், ஒரு முன்னோடி பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை நிபுணர் ஆவார். இவர் பல சர்வதேச புத்தகங்களை எழுதியுள்ளார். மேலும் உலகம் முழுவதும் பிரபலமான பேரியாட்ரிக் அறுவை சிகிச்சை துறையில் இரண்டு புத்தகங்களை எழுதியுள்ளார். அவர் இந்தியா மற்றும் ஆசியா பசிபிக் நாடுகளில் இருந்து வந்த 250-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார். அறுவை சிகிச்சை நிபுணர்களுக்கு பயிற்சி அளிக்க ஓஎஸ்எஸ்ஐ மெய்நிகர் அகாடமியையும் நிறுவியுள்ளார்.

Related Stories: