குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ முகாம்

குடியாத்தம், ஏப்.2: குடியாத்தம் அரசு மருத்துவமனையில் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நேற்று முன்தினம் நடந்தது. இதில் குடியாத்தம், பேரணாம்பட்டு, கே.வி.குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர். முகாமை மருத்துவமனை தலைமை அலுவலர் மாறன்பாபு தொடங்கி வைத்தார். இதில் எலும்பியல் பிரிவு மருத்துவர் பாபு, காது மூக்கு தொண்டை மருத்துவர் ரம்யா, கண் மருத்துவர் ப்ரீத்தி, மனநல மருத்துவர் அறிவழகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, மாற்றுத்திறனாளிகளை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். முகாமில் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு தேசிய அடையாள அட்டைவழங்கப்பட்டது. இதில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலக ஒருங்கிணைப்பாளர் பார்த்தசாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Related Stories: