வேலூர் மாவட்டத்திற்கு சட்டமன்ற குழு விரைவில் வருகை கலெக்டர் தகவல் பொதுப்பிரச்னையை 20ம் தேதி தெரிவிக்கலாம்

வேலூர்: வேலூர் மாவட்டத்திற்கு சட்டமன்ற குழு விரைவில் வர உள்ளதையொட்டி பொதுப்பிரச்னை குறித்து தெரிவிக்க வரும் 20ம் தேதி பொதுமக்கள் தெரிவிக்கலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளதார். இதுகுறித்து கலெக்டர் குமாரவேல்பாண்டியன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழக சட்டப்பேரவையின் 2021-22ம் ஆண்டு மனுக்கள் குழு வேலூர் மாவட்டத்திற்கு விரைவில் வர உள்ளது. இதையொட்டி மாவட்ட எல்லைக்குட்பட்ட பகுதியைச் சேர்ந்த தனிப்பட்ட நபரோ, சங்கத்தினரோ அல்லது நிறுவனத்தினரோ தங்களது தீர்க்கப்பட வேண்டிய பொதுப்பிரச்னைகள், குறைகள் குறித்து மனுக்களாக அளிக்கலாம். மனுக்களை 5 நகல்களாக பிரித்து மனுதாரர் தேதியிட்டு அனுப்ப வேண்டும்.

‘தலைவர், மனுக்கள் குழு, தமிழ்நாடு சட்டமன்ற பேரவை சென்ைன - 600 009’ என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். மனுக்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் ஏப்ரல் 20ம் தேதி. மனுவில் கண்ணியமான வாக்கியம் இருக்க வேண்டும். பல ஆண்டுகளாக அரசு அலுவலகங்களில் தீர்க்கப்படாத பொதுப்பிரச்னைகள் குறித்து மனுவில் தெரிவிக்கலாம். மனுவில் ஒரே ஒரு பிரச்னையை முன்வைத்து ஒரே ஒரு துறையை சார்ந்ததாக இருக்க வேண்டும். மனுவில் பொது முக்கியத்துவம் வாய்ந்த பொருள் இருக்கவேண்டும். தனிநபர் குறைகள், நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்கு தொடர்பான பிரச்னைகள் உள்ளிட்டவை குறித்து இருக்கக்கூடாது. வங்கிக்கடன், தொழிற்கடன், முதியோர் பென்ஷன், தனிநபர் பிரச்னைகள், வீட்டுமனைப்பட்டா, அரசு ஊழியர் பிரச்னைகள் உள்ளிட்டவை இருக்கக்கூடாது. சட்டமன்ற விதிகளுக்கு உட்பட்டு மனுக்கள் குழு, மாவட்டத்திற்கு வரும்போது ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளும். ஒரே மனுதாரர் பல மனுக்கள் அளித்திருந்தாலும் முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மனுவை மட்டுமே எடுத்துக்கொள்ளும். வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் சட்டமன்ற குழு ஆய்வுக்கு வரும் முன் தகவல் தெரிவிக்கப்படும். 20ம் தேதிக்கு பின்னர் வரும் மனுக்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: