வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.14 லட்சத்தில் ‘‘மங்களம்” என்ற பெயரில் கோதுமை மாவு- ரவை பேக்கிங் திட்டம் துவக்கம்

ஈரோடு, மார்ச் 31:  கோபி சரகத்திற்குட்பட்ட ஏ.ஏ.215 ராஜன்நகர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பல் சேவை மைய திட்டத்தின் மூலம் ரூ.14 லட்சம் மதிப்பீட்டில் மங்களம் என்ற பெயரில் கோதுமை மாவு, ரவை பேக்கிங் செய்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த திட்டத்திற்கான முதல் விற்பனையை ஈரோடு மண்டல கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் க.ராஜ்குமார்,  ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி, கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் டாக்டர்.சு.செந்தமிழ்செல்வி ஆகியோர்  துவக்கி வைத்தனர்.

விழாவில் கோபி சரக துணைப்பதிவாளர் .ப.கந்தராஜா, ஈரோடு சரக துணைப்பதிவாளர் கு.நர்மதா, நபார்டு டிடிஎம் அசோக்குமார், ஆத்மா திட்டத்தலைவர் செல்வராஜ், வடக்கு ஒன்றிய அமைப்பாளர் ஆர்.கே.குணசேகரன், சத்தியமங்கலம் ஒன்றியக்குழு துணைத்தலைவர் சுப்புலட்சுமி, சங்கத்தலைவர் எம்.செந்தில்ராஜன்  மற்றும் கூட்டுறவு சார்பதிவாளர்கள், கூட்டுறவு நிர்வாகிகள், சங்கச் செயலாளர்கள், பணியாளர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இவ்விழாவில் பெரியகொடிவேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் காசிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்திற்குட்பட்ட  ரூ.14.52 லட்சம் மதிப்பீட்டில் இரண்டு டாடா ஏசி புதிய சரக்கு வாகனத்தையும் சங்க வியாபார நோக்கத்திற்காக வாகன சாவிகளை வழங்கி துவக்கி வைத்தனர்.

Related Stories: