ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ திருமகன் ஈவெரா பிறந்த நாள் விழா

ஈரோடு, மார்ச் 2: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ  திருமகன் ஈவெரா பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு சார்பில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற இவ்விழாவுக்கு சிறுபான்மைப் பிரிவுத் தலைவர் சுரேஷ் தலைமை வகித்தார். காங்கிரஸ் மாநகர் மாவட்டத் தலைவர் ஈ.பி.ரவி கேக் வெட்டினார். இந்த விழாவில், 3ம் மண்டலத் தலைவர் திருச்செல்வம், சிறுபான்மைப் பிரிவு துணை தலைவர் பாஷா, ஊடகப் பிரிவு தலைவர் முகமது அர்சத், மா நகர் மாவட்ட காங்கிரஸ் விவசாயப் பிரிவு தலைவர் பெரியசாமி, வழக்கறிஞர் பிரிவு மா நிலச் செயலாளர் ராஜேந்திரன், மனித உரிமைகள் பிரிவு தலைவர் வினோத் மாரியப்பா, மாவட்ட வழக்கறிஞர் பிரிவு தலைவர் பிரகாஷ், மண்டலத் தலைவர் ஜாபர் சாதிக், துணைத் தலைவர் ராஜேஷ் ராஜப்பா, சிறுபான்மை துறை ஒருங்கிணைப்பாளர் ஜவஹர் அலி, ஈரோடு பாராளுமன்ற இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் விஜய் கண்ணா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: