திருவலம் அருகே வீடு புகுந்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 வயது சிறுவன் கைது

திருவலம், ஜன.12: திருவலம் அருகே வீடு புகுந்து 7 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 15 சிறுவனை போலீசார் போக்சோவில் கைது செய்தனர். வேலூர் மாவட்டம், திருவலம் அடுத்த ஒரு கிராமத்தை சேர்ந்த கூலித்தொழிலாளியின் மகள் 7 வயது சிறுமி. இவரது பெற்றோர் நேற்று முன்தினம் காலை வழக்கம்போல் வேலைக்கு சென்று விட்டனர். இதனால் தனியாக இருந்த சிறுமி வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தார். அப்போது அதே கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவன் வீட்டினுள் புகுந்து சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இதனால் சிறுமி அலறி கூச்சலிட்டார். சத்தம் கேட்டு பக்கத்து வீட்டிலிருந்த பாட்டி அங்கு வந்தார். இதையடுத்து சிறுவன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டான். இதுகுறித்து சிறுமியின் தாய் திருவலம் போலீசில் நேற்று புகார் அளித்தார். அதன்பேரில் எஸ்ஐ முத்துச்செல்வன் வழக்குப்பதிந்து சிறுவனை கைது செய்து வேலூர் போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறுவர் சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர்.

Related Stories: