போலீசார் விழிப்புணர்வு கொரோனா 3வது அலையை தடுக்க முகக்கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள்

ேவலூர், ஜன.8: கொரோனா 3-வது அலையை தடுக்க முகக்கவசம் அணியாமல் வெளியே வராதீர்கள் என்று பாகாயம் போலீசார் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. வலூர் மாவட்டத்திலும் தொற்று எண்ணிக்ைக அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் வீட்ைடவிட்டு வெளியே வரும்போது கட்டாயம் முகக்கவசம் அணியவேண்டும் என மாவட்ட நிர்வாகம் ேகட்டுக்கொண்டுள்ளது. இந்நிலையில் பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா தலைமையிலான போலீசார், பாகாயம் ஜங்ஷன் பகுதியில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது அவ்வழியாக முகக்கவசம் அணியாமல் வந்த வாகன ஓட்டிகளை தடுத்து நிறுத்தி இலவசமாக முகக்கவசம் வழங்கினர்.

பின்னர் பாகாயம் இன்ஸ்பெக்டர் சுபா ேபசுகையில், ‘‘கொரோனா 3-வது அலை வேகமாக பரவுவதால் மக்கள் வெளியே வரும்ேபாது முன்னெச்சரிக்ைகயுடன் இருக்க வேண்டும். பொது இடங்களில் சமூக இடைவெளி கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். முகக்கவசம் இன்றி வெளியே வரக்கூடாது. அடிக்கடி சோப்பு பயன்படுத்தி ைககளை கழுவ ேவண்டும். இதன்மூலம் 3வது அலையை தவிர்க்கலாம். நேற்றுமுன்தினம் மட்டும் மாநிலத்தில் 2,179 பேர் கொரோனாவால் பாதித்துள்ளனர். அனைவரும் 2 தவணை தடுப்பூசி ேபாட்டிருக்க வேண்டும். 15 முதல் 18 வயது வரை உள்ள சிறுவர்களுக்கு தடுப்பூசி செலுத்த ெபற்றோர்கள் அறிவுறுத்த வேண்டும். இவற்றின் மூலம் கொரோனாவின் வேகத்தை கட்டுக்குள் கொண்டு வர முடியும்’’ என்று அறிவுறுத்தினார்.

Related Stories: