ராயம்புரத்தில் பண்ணைக்குட்டை வெட்டும் பணி

செந்துறை,ஜன.8: ராயம்புரத்தில் பண்ணைக்குட்டை வெட்டும் பணியை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தராஜன் திடீர் ஆய்வு செய்தார். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகிலுள்ள ராயம்புரம், பொட்டவெளி ஊராட்சிகளில் நடைபெறும் ஆவாஸ் யோஜனா ( PMY வீடு கட்டும் திட்டம்), சிமென்ட் சாலை, மற்றும் பண்ணை குட்டை பணிகளை ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுந்தராஜன் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது ஒரு பயனாளியின் பண்ணைக்குட்டை ஆய்வு பணியை மேற்கொண்டபோது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித்திட்டத்தில் பணியாற்றக்கூடிய பணியாளர்களை கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும், முகக்காவசம் இல்லாமல் எங்கும் செல்லக்கூடாது என்று அறிவுறுத்தி அவர்களுக்கு முகக்கவசம் வழங்கினார். பின்பு பணி ஆய்வு மேற்கொண்டார். இந்நிகழ்ச்சியில் அரியலூர் கிராம ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர் அகிலா, அரியலூர் ஒன்றிய பொறியாளர் காமராஜ், அரியலூர் ஒன்றிய மேற்பார்வையாளர் தமிழ்மணி சரவணன், ஊராட்சி மன்ற தலைவர் ராஜகுமாரி அறிவழகன், ஊராட்சி செயலாளர் பார்வதி ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: