மாநில நெடுஞ்சாலை வேலூர் கோட்டத்தில் 1,500 மரக்கன்று நடும் விழாவை தலைமை பொறியாளர் தொடங்கி வைத்தார்

வேலூர், டிச.5: தமிழகத்தில் சாலை விரிவாக்க பணிக்காக சாலையோரம் உள்ள மரங்கள் வெட்டப்படுகிறது. வெட்டப்படும் மரங்களின் எண்ணிக்கை விட அதிகமாக புதிதாக மரங்களை நட்டு, வளர்க்க வேண்டும் என மாநில நெடுஞ்சாலை துறைக்கு தமிழக அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, வேலூர் கோட்டத்தில் கடந்த 3 ஆண்டுகளில் வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் 20 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டு, பராமரிக்கப்பட்டு வருகிறது. தற்போது, வேலூர், ராணிப்பேட்டை மாவட்டங்கள் பரிக்கப்பட்டு, ராணிப்பேட்டை புதிய கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேலூர் கோட்டத்தில் இந்தாண்டு 1,500 மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடந்தது. வேலூர் விருதம்பட்டில் மாநில நெடுஞ்சாலை துறை கட்டுப்பாட்டில் உள்ள இடத்தில் மரக்கன்று நடும் விழாவினை நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகர் தொடங்கி வைத்தார். அப்போது, கண்காணிப்பு பொறியாளர் பழனிவேல், கோட்ட பொறியாளர் சரவணன், உதவி கோட்ட பொறியாளர்கள் பிரகாஷ், சுகந்தி மற்றும் ஊழியர்கள் இருந்தனர்.

Related Stories: