பென்னாத்தூர் பேரூராட்சியில் பொதுமக்கள் கோரிக்கை

அணைக்கட்டு, டிச. 5: வேலூர் மாவட்டம், பென்னாத்தூர் போரூராட்சி அல்லிவரம் கிராமத்தில் காய்ச்சல், வயிற்று போக்கு, வாந்தி உள்ளிட்ட பாதிப்புகளால் 20க்கும் மேற்பட்ேடார் நேற்றுமுன்தினம் பாதிப்படைந்தனர். இதில், சிறுவன் உள்பட 2 பேர் உயிரிழந்தனர். இதுகுறித்து, தகவலறிந்த கலெக்டர் குமாரவேல் பாண்டியன், எம்எல்ஏ நந்தகுமார் உள்ளிட்டோர் கிராமத்தில் ஆய்வு செய்தனர். தொடர்ந்து, கிராமத்தில் சிறப்பு மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு அப்பகுதி மக்களுக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அங்கிருந்த மக்கள் சப்தலிபுரம் ஏரியில் கொட்டபட்டுள்ள மருத்துவ கழிவுகளுடன் கலந்து இப்பகுதிக்கு வந்த தண்ணீரால் பாதிப்புகள் ஏற்பட்டது, மேலும் அதில் ஈக்கள் அதிக அளவில் உள்ளது, அதில் மீன்கள் பிடித்து சாப்பிட்டதாலே இந்த பாதிப்பு ஏற்பட்டதாக புகார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பென்னாத்தூர் பேரூராட்சி மக்கள் கூறுகையில், `தற்போது பாதிக்கபட்டுள்ள அல்லிவரம் கிராமத்தை சுற்றி கன்னடிபாளையம், சப்தலிபுரம், பென்னாத்தூர், கேசவபுரம் மற்றும் பல கிராமங்கள் உள்ளன. அந்த கிராமத்தில் ஏற்பட்ட பாதிப்பு சுற்றியுள்ள கிராமங்களுக்கு பரவாமல் தடுக்க, மழை தண்ணீரால் கொசுக்கள் உள்ளிட்டவைகள் அதிகாரித்திருப்பதாலும் அதன் மூலம் பரவும் நோய்களை தடுக்கவும் பேரூராட்சிக்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: