செல்போன் தொலைந்ததால் உயிரை விட்ட வாலிபர்

குடியாத்தம், ஏப்.14: குடியாத்தம் புவனேஸ்வரிபேட்டையை சேர்ந்தவர் சங்கர்(25), பெயிண்டர். இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பயன்படுத்தி வந்த செல்போனை பஸ் நிலையத்தில் தொலைத்துள்ளார். இதனை தேடி வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று குடிபோதையில் செல்போன் தொலைந்தது குறித்து கூறி அழுது புலம்பி கொண்டு இருந்தாராம். பின்னர், அவரது வீட்டில் இருந்த பேனில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து இறந்த சங்கரின் தந்தை விஜயகுமார் நேற்று கொடுத்த புகாரின்பேரில், குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறார்.

Related Stories:

>