ஈரோடு, ஜூலை 24: ஈரோடு மாவட்டத்தில் குறு மைய அளவிலான விளையாட்டு போட்டிகள் 6ம் தேதியுடன் நிறைவடைய உள்ளது.ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, பெருந்துறை, கொடுமுடி, பவானி, கோபி, நம்பியூர், சத்தி என 8 குறு மையங்கள் உள்ளன. இந்த குறு மையங்களில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் 14 வயது, 17 வயது மற்றும் 19 வயதுக்கு உட்பட்ட மாணவ-மாணவிகளுக்கு 100 மீட்டர், 200 மீட்டர், 400 மீட்டர், 1,500 மீட்டர் தொடர் ஓட்டம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல், குண்டு ஏறிதல், ஈட்டி ஏறிதல் உள்ளிட்ட பல்வேறு வகையான தடகள போட்டிகளும், குழு போட்டிகளும் நடந்து வருகிறது.
