சத்தியமங்கலம், ஆக.1: ஈரோடு மாவட்டம், தாளவாடி மலைப்பகுதியில் அறுவடை செய்யப்படும் கரும்பு லாரிகளில் பாரம் ஏற்றப்பட்டு வனப்பகுதி சாலை வழியாக சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் சர்க்கரை ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. வனப்பகுதி சாலை வழியாக கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை காட்டு யானைகள் வழிமறித்து கரும்பு துண்டுகளை பறித்து தின்பதால் அவ்வப்போது போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. இந்த நிலையில் தாளவாடி அருகே கும்டாபுரம் வனப்பகுதியில் உள்ள ஒரு ஆண் யானை கரும்பு பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகளை குறிவைத்து சத்தியமங்கலத்தில் இருந்து தாளவாடி செல்லும் வனப்பகுதி சாலையில் வேகத்தடை இருக்கும் பகுதியில் காத்திருக்கிறது.
