நெல்லை தந்தை மற்றும் 5வயது மகன் இரட்டைக் கொலை வழக்கில் மூலச்சி பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் (29) என்பவர் இன்று கைது செய்யப்பட்டார். போலீசாரை பார்த்து தப்பியோடிய அவர் கீழே தவறி விழுந்ததில் கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு தற்போது சிகிச்சையில் உள்ளார். இரட்டைக் கொலை வழக்கில் இதுரை 8 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மீதமுள்ளவர்கள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
