11 வயது சிறுமிக்கு சூடுவைத்து சித்ரவதை கொடூர சித்தி கைது

ஈரோடு: ஈரோடு வெண்டிபாளையம் பகுதியில் சீனிவாசராவ் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் இவரது முதல் மனைவி. குமுதா பிரிந்து சென்றார். இவர்களுக்கு 11 வயது, 7 வயது என 2 மகள்கள் உள்ள நிலையில், மணிகண்டன் கயல்விழி (25) என்ற பெண்ணை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். இந்நிலையில், முதல் மனைவிக்கு பிறந்த 11 வயது சிறுமியை 2வது மனைவியான கயல்விழி கரண்டியால் சூடு வைப்பது, சுடுநீர் ஊற்றுவது, அடித்து சித்ரவதை செய்வது என பல்வேறு கொடுமைகளை செய்ததுடன், ரயில்வே தண்டவாளத்தில் விழுந்து சாகுமாறும் மிரட்டியுள்ளார்.

சிறுமியின் கதறலை கேட்ட அக்கம் பக்கத்தினர் சைல்டு லயன் 1098-க்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், குழந்தைகள் பாதுகாப்பு அதிகாரிகள், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசாருடன் சென்று சிறுமியை மீட்டனர். தொடர்ந்து சிறுமியை கொடுமைப்படுத்திய கயல்விழியை கைது செய்த போலீசார், அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

Related Stories: