வேலூரில் போதை தகராறில் பயங்கரம்; பெயிண்டர் கழுத்தறுத்து கொடூர கொலை: 5 பேரை பிடித்து விசாரணை

வேலூர்: வேலூர் சதுப்பேரியில் மது போதையில் ஏற்பட்ட தகராறில், பெயிண்டர் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டுள்ளார். வேலூர் சதுப்பேரியை சேர்ந்தவர் வினோத்குமார்(42), பெயிண்டர். கருத்து வேறுபாடு காரணமாக மனைவியை பிரிந்து தனியாக வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று காலை சிறுகாஞ்சியில் தென்னமர கிணறு பகுதியில், சரவணன் என்பவர் நிலத்தில் உள்ள கிணற்றின் அருகே வினோத்குமார் கழுத்தறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

இதுகுறித்து அரியூர் போலீசார் விசாரணை நடத்தினர். தகவலறிந்த எஸ்பி சிவராமன், ஏஎஸ்பி தனுஷ்குமார் ஆகியோரும் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். பின்னர் மோப்ப நாய் சாரா வரவழைத்து துப்பு துலக்கப்பட்டது. மோப்ப நாய் சாரா மோப்பம் பிடித்தபடி சிறிது தொலைவில் உள்ள ஒரு வீட்டிற்குள் சென்றது. பின்னர், அந்த வீட்டை சுற்றி சுற்றி வந்தது. தொடர்ந்து சதுப்பேரி கிராமத்திற்கு சென்று, அங்கிருந்து சதுப்பேரி ஏரிக்கரை வரை ஓடிச்சென்று நின்றது.

இதுகுறித்து அரியூர் போலீசார் கூறுகையில், ‘கொலை செய்யப்பட்ட வினோத்குமாரும், அதே பகுதியைச் சேர்ந்த புலிகேசி என்கிற ராஜ்குமாரும் நேற்று முன்தினம் ஒன்றாக சுற்றி வந்துள்ளனர். நேற்று முன்தினம் இரவு இருவரும் கிணற்றின் அருகே அமர்ந்து மது குடித்துள்ளனர். அப்போது ஏற்பட்ட தகராறில் வினோத்குமார் கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டிருக்கலாம். ராஜ்குமார் தலைமறைவாக உள்ளதால், அவரை ேதடி வருகிறோம். மேலும் வினோத்குமாருக்கு அதே கிராமத்தை சேர்ந்த பெண்ணுடன் கள்ளத்தொடர்பு இருந்ததும் தெரியவந்துள்ளது. எனவே இதுதொடர்பான பிரச்னையில் கொலை நடந்ததா என்ற கோணத்திலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக 5 பேரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருகிறோம்’ என்றனர்.

வாலிபர் சரமாரி வெட்டிக்கொலை
ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த தணிகைபோளூர் பகுதியில் உள்ள ஏரியின் அருகே நேற்று காலை சிலர் மாடுகளை மேய்ச்சலுக்காக ஓட்டிச்சென்றனர். அங்கு சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் வெட்டுக்காயங்களுடன் ரத்தவெள்ளத்தில் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். தகவலறிந்து அரக்கோணம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இறந்த வாலிபரின் தலை, முகம் மற்றும் பல்வேறு இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. அவர், யார் எந்த ஊரை சேர்ந்தவர் என தெரியவில்லை. அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர், அவரை சரமாரி வெட்டி கொன்றவர்கள் யார்?, கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து போலீசார விசாரணை நடத்தி வருகின்றனர்.

ஒரே மாதத்தில் 5 கொலை
வேலூர் மாவட்டம் குடியாத்தம் எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த விக்னேஷ்(28), ஏசி மெக்கானிக். இவர் கடந்த 14ம் தேதி இரு பிரிவினரிடையே ஏற்பட்ட திடீர் தகராறில் கொல்லப்பட்டார். காட்பாடி அடுத்த கல்புதூரில் திருவிழா தகராறில் தினகரன் என்பவர் ஓட ஓட விரட்டி கொலை செய்யப்பட்டார். பேரணாம்பட்டில் 6 வயது சிறுவனை அவரது அத்தை ரேவதி அடித்து கொலை செய்தார். காட்பாடி, வேலூர் காகிதப்பட்டறை பகுதிகளில் வடமாநிலத்தை சேர்ந்த 2 வாலிபர்கள் கொலை செய்யப்பட்டனர். கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 5 கொலை நடந்துள்ளது. இந்நிலையில் நேற்று மட்டும் 2 பேர் கொலை செய்யப்பட்டு உள்ளனர்.

Related Stories: