மத்திய வரி அதிகாரிகளின் பறக்கும் படை

கோவை, மார்ச் 7:  கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டத்தில் மத்திய வரி அதிகாரிகள் அடங்கிய 5 பறக்கும் படை அமைக்கப்பட்டுள்ளது. இந்த பறக்கும் படையினர் தேர்தல் தொடர்பாக பணம் பட்டுவாடா செய்வதை கண்டறிய, கண்காணிக்க உருவாக்கப்பட்டுள்ளது. பணம் பட்டுவாடா தொடர்பாக 94476 03774 என்ற செல்ேபான் எண்ணில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். வருமான வரி கமிஷனர் மேற்பார்வையில் இந்த பறக்கும் படைகள் ெசயல்படும். தேர்தலில் ஓட்டுக்காக பணம் பட்டுவாடா செய்வதை தடுக்க இந்த குழுவினர் தீவிரம் காட்டுவார்கள். தேர்தல் நியாயமாக, நேர்மையாக நடத்த பொதுமக்கள் உதவி செய்யவேண்டும். வாகனங்களில் பணம், பரிசு பொருட்கள் ெகாண்டு சென்றால் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என வருமான வரி இணை கமிஷனர் விஜயகிருஷ்ணவேலன் தெரிவித்துள்ளார்.

Related Stories: