பேரணாம்பட்டு வனப்பகுதி தொட்டிகளில் வனவிலங்குகளுக்கு தண்ணீர் நிரப்பிய வனத்துறையினர்

பேர்ணாம்பட்டு, மார்ச் 6: கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் பேரணாம்பட்டு வனப்பகுதியில் இருந்து தண்ணீர் தேடி வனவிலங்குகள் ஊருக்கு வந்துவிடும் நிலை உள்ளது. இதனை தடுக்க வனப்பகுதியில் 17 தண்ணீர் தொட்டிகளை வனத்துறையினர் அமைத்துள்ளனர். இந்த தொட்டியில் வேலூர் மண்டல கூடுதல் முதன்மை தலைமை வன காவலர் அறிவுறையின்படி 15 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் நிரப்பப்படுகிறது. அதன்படி, நேற்று வனப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் தொட்டிகளில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து தண்ணீர் நிரப்பும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டனர்.

Related Stories: