இந்தியாவுக்கு ஸ்டெல்த் எஸ்யூ- 57 போர் விமானம்: ரஷ்ய அதிபர் புடின் அறிவிப்பு

செயின்ட் பீட்டர்ஸ்பர்க், ஜூன் 6: ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ரஷ்யாவின் ஸ்டெல் போர்விமானமான சுகோய் எஸ்யூ-57 இந்தியாவுக்கு வழங்குவதற்கு முன்மொழிந்துள்ளார். பல தசாப்தங்களாக இந்திய முப்படைகளுக்கு தளவாடங்கள் சப்ளை செய்வதில் ரஷ்யா முன்னணி நாடாக இருந்து வருகின்றது. இந்நிலையில், ஜந்தாம் தலைமுறை போர் விமானத்திற்கான பல ஆண்டுகாலத் தேடலுக்கு பிறகு இந்தியா தனது லட்சியத் திட்டமான மேம்பட்ட பல பணி போர் விமானம் திட்டத்தை தொடங்கியுள்ளது. இது நாட்டின் மிகப்பெரிய உள்நாட்டு விண்வெளி மற்றும் பாதுகாப்புத் திட்டமாக கருதப்படுகின்றது.

முன்னணி செய்தி நிறுவனங்களின் தலைவர்களுடன் உரையாற்றிய ரஷ்ய அதிபர் புடின், இந்தியா-ரஷ்யா இடையிலான பாதுகாப்பு மற்றும் ராணுவ உறவுகளின் பல்வேறு அம்சங்கள் குறித்து பேசினார். அப்போது ஸ்டெல்த் எஸ்யூ-57 விமானத் திட்டத்தில் இந்தியாவை ஈடுபடுத்துவதற்கு ரஷ்யா இன்னும் ஆர்வமாக உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். மேலும் கொள்கையளவில் இது ரஷ்யா-இந்தியா கூட்டு தயாரிப்பாக இருந்திருக்க முடியும். நாங்கள் இதைத் தனியாகவே உருவாக்கினோம். ஆனாலும் இந்தியாவுடன் இணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம். இதில் எந்த கட்டுப்பாடுகளும் இருக்காது\\” என்று தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தலைமுறை போர் விமானத்தை கூட்டாக உருவாக்கவும், தயாரிக்கவும் இந்தியாவும் ரஷ்யாவும் 15 ஆண்டுகளாக பேச்சுவார்த்தை நடத்தி வந்தன. இருப்பினும் அதிக செலவு காரணமாக தொடர்ந்து ஈடுபட விருப்பமில்லை என்று கடந்த 2021ம் ஆண்டில் இந்தியா ரஷ்யாவிடம் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

 

Related Stories: