ஈரான் போர் தீர்மான விவகாரத்தில் எனக்கு எதிராக செயல்படுபவர்கள் தேசபக்தியற்றவர்கள் – டிரம்ப் கடும் விமர்சனம்

வாஷிங்டன்: தனக்கு எதிராக ஈரான் போர் தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் “தேசபக்தி அற்றவர்கள்” என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடுமையாக விமர்சித்துள்ளார். ஈரான் மீதான டிரம்பின் போர் அதிகாரங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்தத் தீர்மானம், அமெரிக்க பிரதிநிதிகள் சபையில் (House of Representatives) 215–208 என்ற வாக்குகள் கணக்கில் நிறைவேற்றப்பட்டது.

நாடாளுமன்றத்தின் முறையான அனுமதி அல்லது போர் பிரகடனம் இல்லாமல், டிரம்ப் தன்னிச்சையாக ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்வதைத் தடுப்பதையும், ஈரானுக்கு எதிரான அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறுவதையும் இந்தத் தீர்மானம் நோக்கமாகக் கொண்டுள்ளது. இதனிடையே டிரம்பின் சொந்தக் கட்சியான குடியரசுக் கட்சியை சேர்ந்த சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், இந்த தீர்மானத்திற்கு ஆதரவாக (அதாவது டிரம்ப்பிற்கு எதிராக) ஜனநாயக கட்சியினருடன் இணைந்து வாக்களித்தனர்

ட்ரூத் சோஷியல் தளத்தில் வெளியிட்டுள்ள ஒரு பதிவில், இந்த வாக்குப்பதிவு “அர்த்தமற்றது” என்றும், இதில் பங்கேற்று எனக்கு எதிராக வாக்களித்த நாடாளுமன்ற உறுப்பினர்களின் தேசநலன் மற்றும் தேசம் மீதான விசுவாசம் கேள்விக்குரியது என்றும் கடுமையாக சாடி இருக்கிறார்.

Related Stories: