செயின்ட் பீட்டர்ஸ்பர்க்: உலகின் முன்னணி செய்தி நிறுவனங்களின் ஆசிரியர்களுடனான கலந்துரையாடலில் ரஷ்ய அதிபர் புடின் நேற்று முன்தினம் பேசியதாவது: இந்தியாவுடனான ஒட்டுமொத்த ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதில் ரஷ்யா உறுதியாக உள்ளது. இருதரப்பு வர்த்தகம் தற்போதுள்ள ரூ.5 லட்சத்து 75 ஆயிரம் கோடியில்( 60 பில்லியன் டாலர்) இருந்து ஆண்டுக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரம் கோடி (100 பில்லியன் டாலர்) ஆக உயரும் என எதிர்பார்க்கிறோம். ரஷ்யாவுடனான உறவுகளை குறைத்து கொள்ளுமாறு இந்தியா மீது மேற்கத்திய சக்திகள் அழுத்தம் கொடுக்கின்றன.
உலகின் அதிக மக்கள்தொகை கொண்ட நாடான இந்தியா மீது அழுத்தம் கொடுப்பது, சர்வதேச மற்றும் இருதரப்பு உறவுகளுக்குப் பாதகமானது என்பதை அனைவரும் புரிந்து கொண்டுள்ளனர். இந்தியா நம்பகமான கூட்டாளி. ரஷ்யாவுடனான உறவை குறைக்குமாறு இந்தியாவை கட்டாயப்படுத்தும் மேற்கத்திய முயற்சிகள் சர்வதேச ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும். இவ்வாறு அவர் கூறினார்.
இந்தியா-சீனா உறவு புடின் கருத்து:
அதிபர் புடின் மேலும் கூறுகையில்,ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் கூறியுள்ளார். சீன அதிபர் ஜின்பிங்கும் பிரதமர் மோடியும் எல்லைப் பிரச்னை உட்பட, பரஸ்பர நலன் சார்ந்த அனைத்துப் பிரச்னைகளையும் தீர்க்க முயன்று வருகின்றனர். இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான சிக்கலான இருதரப்பு உறவுகளில் மாஸ்கோ தலையிடாது என்றார்.
