இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் கில்கிட்-பால்டிஸ்தான் என்றழைக்கப்படும் சட்டமன்றத்தில் மொத்தம் உள்ள 53 இடங்களில் 45 இடங்களுக்கு நேரடியாக தேர்தல் நடக்கிறது. 8 இடங்கள் பெண்கள், தொழில்நுட்ப வல்லுனர்கள், மதகுருமார்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கு வரும் 9ம் தேதி முதல் 19ம் தேதி வரை வேட்புமனுக்கள் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் ஆகியவை இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதிகள் என்று இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் பாகிஸ்தான் சட்டவிரோதமாக தேர்தலை நடத்துகிறது என்பது இந்தியாவின் நிலைப்பாடு ஆகும்.
பாகிஸ்தானால் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் நிகழும் கடுமையான மனித உரிமை மீறல்கள், அரசியல் அடக்குமுறை, பொருளாதாரச் சுரண்டல் மற்றும் சுதந்திர மறுப்பு ஆகிய அடிப்படைப் பிரச்னைகளை,பாகிஸ்தானின் இத்தகைய முயற்சிகள் மறைத்துவிட முடியாது என்று இந்தியா கூறியுள்ளது.
