ரயில் மோதி வாலிபர் பலி

கோவை, மார்ச் 6:  கோவை பீளமேடு டெக்ஸ்டூல் பாலம் அருகே தண்டவாளத்தில் வாலிபர் ஒருவர் சடலமாக கிடப்பதாக நேற்று காலை ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் உடலை கைப்பற்றி கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர், கோவை கணபதி பாலன் நகரை சேர்ந்த வேல்ராஜ் (21) என்பதும், 10ம் வகுப்பு வரை படித்து விட்டு தந்தைக்கு உதவியாக லேத் பட்டறையில் வேலை பார்த்து வந்ததும் தெரியவந்தது. அவர் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரயில் மோதி இறந்தாரா? அல்லது ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டாரா? என்பன உள்ளிட்ட கோணங்களில் ரயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு 745 புகார்கள் வந்தனகோவை, மார்ச் 6: கோவை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை மார்ச் 1ம் தேதி முதல் பயன்பாட்டிற்கு வந்தது. அன்று முதல் தற்போது வரை சுமார் 745 புகார்கள் வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு தேர்தல் விதிமீறல்களை கண்காணிக்கவும், பொதுமக்கள் புகார் செய்யவும் வசதியாக அனைத்து மாவட்டங்களில் தேர்தல் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்க தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கோவை கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது வந்தது. இதில், 24 மணி நேரமும் அலுவலர்கள் பணியில் இருப்பர்.  சந்தேகங்களுக்கு தீர்வு காண்பதற்காகவும், புகார் அளிக்கவும் 1800-425-4757  என்ற கட்டணமில்லா தொலைபேசி வசதி செய்யப்பட்டுள்ளது. வாக்காளர் அடையாள அட்டை பதிவு, படிநிலை புகைப்பட வாக்காளர் அட்டை அச்சிடுதல் மற்றும் வினியோகம் ஓட்டுச்சாவடி தொகுதி விவரங்கள் அறிதல், தேர்தல் அதிகாரிகள் பற்றி அறிதல் ஆகியவற்றிற்கு 1950 இந்த எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து மாவட்ட தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறுகையில்,” கோவை மாவட்ட தேர்தல் கட்டுப்பாட்டு அறைக்கு மார்ச் 1ம் தேதி முதல் தற்போது வரை சுமார் 745 புகார்கள் வந்துள்ளன. இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றனர்.

Related Stories:

>