அரசு வீட்டை காலி செய்து ராயப்பேட்டையில் புதிய வீட்டில் குடியேறிய எடப்பாடி பழனிசாமி

சென்னை: தமிழக தேர்தலில் அதிமுக 3வது இடத்திற்கு தள்ளப்பட்டதால் 5 ஆண்டுகளாக வகித்து வந்த எதிர்க்கட்சி தலைவர் பதவியை எடப்பாடி இழந்துள்ளார். இந்த நிலையில் 2011ம் ஆண்டு முதல் பசுமை வழி சாலையில் உள்ள அரசு பங்களாவான ‘செவ்வந்தி’யில் அமைச்சர், முதல்வர் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் என்ற அந்தஸ்தில் வசித்து வந்த எடப்பாடி தற்போது எம்எல்ஏவாக மட்டுமே உள்ளதால் அரசு இல்லத்தில் இருந்து காலி செய்துவிட்டு ராயப்பேட்டையில் அதிமுக அலுவலக பகுதிக்கு அருகே புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்துள்ளார்.

அமைச்சர் அல்லாதவர்களுக்கு பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லங்களில் குடியிருக்க அனுமதியில்லாததால் காலி செய்ய வேண்டும் என பொதுப்பணி துறை சார்பில் முறையாக அறிவுறுத்தப்பட்ட நிலையில் தற்போது இந்த புதிய வீட்டில் எடப்பாடி குடியேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Stories: